ethiri.com

இவளை கொல்லுங்கள்….!

கொஞ்ச சுகம் தின்ன
கொஞ்சி மறந்து கிடந்தவளே ….
உண்ண சோறு இல்லாம
ஊர் ஒளிஞ்ச நிலை என்ன ..?

பத்து நிமிட சுகம் திண்ணு
பாதி வாழ்வை கரைத்தவளே
பெத்தெறிஞ்சு போகையில – உன்
பெத்த மனம் துடிக்கலையோ …?

ethiri.com

ஆசை வந்து உடல் தின்ன
அவிழ்த்தன்று பிணைந்தவளே
வெள்ளாடை போகையிலே – நீ
வெறி கொண்டு தடுக்கலையே ….

ஊதி பெருத்த வண்டி
ஊர் பார்க்கா மறைச்ச வண்டி ..
சேதி சொல்லிரிச்சே – நீ
செத்தவளா ஆகிரிச்சே….

நாய் வந்து திண்ணையில
நா தடவி தூக்கையிலே …
உன் மனசு பதறலையா
உன் குற்றம் புரியலையா …??

தாலி கட்டாம
தங்க பூ சிதைச்சவளே – நீ
வாழ்ந்தென்ன இருந்தென்ன
வாழ்க்கை செத்திரிச்சே …!

தப்பேதும் செய்யாத
தமாரைப் பூ ஒன்றை ….
அப்பன் பேர் தெரியா
அடி பாவி கொன்றாயோ…?

தொப்பிள் கொடி அறுக்க முன்ன
தொண்டை திரிகி கொன்றவளே …
உன்னை வாழ விட்டா – எம்மை
உலக நீதி கொல்லுமடி …!

– வன்னி மைந்தன் -( ஜெகன் )
12/04/2017 

Related Post