ethiri.com

காதலே என்னை விடு …!

மறக்க முடியா ஆண்டொன்றில்
மனமே நீ வந்தாய் – உன்னை
மறக்க முடியா வலி தந்து
மனமே நீ சென்றாய் ….

துடிக்க வைத்து நீ சிரித்தாய் – உன்
துணிவு இது தானோ ..?
இமை மடிக்க வைத்து நீ சென்றாய்
இது தான் உன் விளையாட்டோ ..?

ethiri.com

படிக்க வைத்தாய் வாழ்வொன்றை
பக்குவம் பெற்று விட்டேன் – இனி
நடித்தே காதல் வந்தாலும்
நாட மாட்டேன் பால் நிலவை …

அரிக்கும் உந்தன் நினைவுகளை
அறுத்து மெல்ல எறிகின்றேன் ….
வெளிக்கும் அந்த நிலவொளியை
வெறித்து பார்த்தே ஒழிக்கின்றேன்….

– வன்னி மைந்தன்-( ஜெகன் )
ஆக்கம் -10/04/2017
 

Related Post