ethiri.com

பதில் சொல்…!

ஏனோ வந்து சந்தேகம்
எட்டி எட்டி பார்க்குது ..?
என் உறவை வெட்டி போக
ஏனோ வேவு நடக்குது …?

நீ சாய்ந்த என் மார்பில் – உன்
நினைவு தானே புதைந்திருக்கு …
உனை தேடி நான் அலைந்தேன்
உன் மனசு எங்கிருக்கு …?

வீணா ஏன் உன் மனசை
வீணா நீ கலக்கிற ..?
யார் பிடிக்க நீ இந்த
யாக வேட்டை நடத்திற…?

உடைந்து மனம் போயிடத்தான்
ஊர்வலத்தை கூட்டிற- நான்
உள்ளம் விட்டு போயிட்டா – நீ
எங்க போயு முறையிடுவ ..?

-வன்னி மைந்தன் –
ஆக்கம் -10/04/2017
 

Related Post