ethiri.com

உன்னோடு நான் கண்ணீர் துடை …!

கண்ணே நீயும் கலங்காதே
கனவில் நீயும் தூங்காதே
வருவேன் நானே உனை தேடி
வசாலிலே மயங்காதே …….

பிரிந்தேன் உன்னில் நான் என்றே
பிழிந்து கண்ணீர் ஊற்றாதே
அறிந்தே உன்னை நான் தொடர்ந்தேன்
அன்பே அன்பே கலங்காதே …..

ஒன்றில் ஒன்ராய் நாமிருந்தோம்
ஓர் உலகாய் நாம் நிமிர்ந்தோம்
விழுந்திட தானோ வான் தொட்டோம்
விடியல் கண்டே நாம் நிமிர்வோம் ….

பிரிவுகள் ஒரு நாள் கூடி வரும்
பிணையும் போது மறந்து விடும்
அழுதிடின் ஆயுள் குறைந்து விடும்
அன்பே அன்பே கண்ணீர் விடு …!

வன்னி மைந்தன் – (ஜெகன் )
ஆக்கம் -06/04/2017 

Related Post