ethiri.com

கல்லறையில் சாயும் வரை காதல் சாகாது ….!

முடி எல்லாம் வெள்ளையாச்சு
முன்னே கூடி வயசு மூப்பாச்சு ….
ஆசை மட்டும் நரைக்கவில்லை
ஆள் மனதில் காதல் சாகவில்லை ….

நேற்று பிறந்த பருவம் போல
நினைவில் காதல் சுற்றுதே …
பருவ காற்றை கண்டாலே
பளிங்காய் மனசு தெறிக்குதே ….

ethiri.com

சின்ன வயது குறும்புகளோ
சிறகடித்து மனம் தடவ ….
வெள்ளி நிலா நினைவில் வரும்
வெள்ளை மன காதல் பேசும் ….

அன்று மனம் புதைத்தவை
அள்ளி எடுத்து பார்க்கையில ….
விழி இரண்டில் நீராச்சு
வீழ்ந்து மனம் உடைந்திரிச்சு….

இது தான் வாழ்வென்று ஆன பின்ன
இதயம் அழுதென்ன சிரித்ததென்ன …
உடல் கல்லறை உள்ளே சாயும் வரை
கன்னி காதல் சாகாது ….!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் – 04/04/2017
 

Related Post