ethiri.com

மறக்க நினைத்தேன் தோற்று போனாய் ….? …………..

மறக்க நினைத்தும் என்னை என்ன
மறந்தா இன்று போனாய் ..?
முடியா ஒன்றை எண்ணி ஏனோ
முயன்றும் நீ தோற்ராய் ….?

பதியம் வைத்த காதல் நெஞ்சில்
பாரில் என்றும் அழியாது ….
பாரே திரண்டு வந்தாலும்
பாச காதல் தொலையாது …..

ethiri.com

முறியும் என்றும் நினைத்து நெஞ்சில்
காதல் முளைப்பதில்லை …
முதலாம் காதல் நெஞ்ச திரையில்
மூடி கிடப்பதில்லை ….

மனதை பார்க்கும் காதல் என்றும் – வழி
மாறி சென்றதில்லை ……
மரணம் சூழ்ந்த போதும் அது
வாடி நின்றதில்லை …..

உண்மை காதல் உள்ளமுள்ளே
உயரத்தானே பறக்கும் – இதை
உணர்ந்து கொண்டார் காதல் வாழ்வில்
உயரத்தானே நிற்கும் ….!

– வன்னி மைந்தன் ( ஜெகன் )
நினைவே உனக்கு காணிக்கை  

Related Post