ethiri.com

விவசாயிகள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு……………..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக அறிவிக்க வேண்டும், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 14-ந்தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டம் நடக்கும் இடத்துக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங்குடன் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்திக்க வைத்தார்.

ethiri.com

இந்நிலையில் 17-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று, விவசாய சங்க கொடியின் நிறமான பச்சை நிற துண்டை கழுத்தில் அணிந்தபடி விவசாயிகளுடன் தரையில் அமர்ந்து ராகுல் காந்தி தனது ஆதரவை தெரிவித்தார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உடன் சென்றிருந்தனர். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post