ethiri.com

திட்டம் சரியானால் வெற்றி உனக்கு …!

கடல் நடு ஓடியே திசையது தேடியே
கரையது ஏறுது படகு – நெஞ்சில்
கறையது கொண்டு உயர்நிலை தேடின்
கரையது சேருமா வாழ்வு ..?

படி நிலை மறப்பின் பதநிலை மறைப்பின்
பாரினில் வெற்றியா காண்பாய் .? விழி
பாரது இலக்கு பரந்து சிதறின்
பார் குறி இலக்கு தவறும் ….

தெளி நிலை இழப்பின் தெரிவுகள் பொய்ப்பின்
தேடியா இலக்கா கிட்டும் ..?
புரி நிலை சிறப்பின் புயலெனே வெடிப்பின்
பூட்டிய கதவுகள் திறக்கும் ….

ethiri.com

தீட்டிய திட்டம் மேல் நிலை உடைப்பின்
தீர்வுக்கு உலகுன்னை அழைக்கும்
வாடிடும் நிலையில் மனநிலை கொண்டால்
வையத்தில் வாழ்வா செழிக்கும் …?

தேடிட செல்வம் ஓடிட முனைந்தால்
தெருவும் உன்னை அழைக்கும்….
கூன் படா சிந்தை முன்னே விரித்தால்
குச்சி தீ குச்சி நீ தான் …!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -26/03/217 

Related Post