ethiri.com

காதலே என்னை மன்னித்து விடு …!………………….

நான்கு பக்க சுவருக்குள்ள
நானும் அன்று சிறை இருக்க …
பக்கம் வந்து பாசம் தந்தாய்
பால் நிலவாய் நேசம் கொண்டாய் …

ethiri.com

உள்ளமது வலி போக்க
உன்னையே தந்தவளே …
இன்று எண்ணி அழுகிறேன்
இதயமே உடைந்ததடி …

பக்கமது நிக்கையில – உந்தன்
பாசமது புரியவில்லை ….
பாசம் உன்னை தேடையிலே
பாவை நீ பக்கமில்லை ….

அறியாத பருவமதில்
அன்று வந்த காதலினால் ….
புரியாமல் போனேனடி
புழுவாய் துடிக்கிறேன் …

நான் பட்ட வேதனை போல்
நீயன்று துடித்திருப்பாய் ….
உன் விழியின் நீர் துடைக்கா
உன்னை மறந்து சென்றேனோ..??

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -24/03/2017
 

Related Post