ethiri.com

ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்………………

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

ethiri.com

இந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது, இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்ற தகவல் வந்த வண்ணம் உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘2.0’ என்ற படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. பா.ஜ.க அரசின் அனுமதியோடு இந்த அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் வியப்பதற்கில்லை.

ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகரை வைத்து விழாவை நடத்தினால் இலங்கை தமிழ் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடக்கிறது என உலகத்துக்கு காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

சிங்கள அரசாங்கத்துக்கும், தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுத்தப்படுகிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும், எனவே, ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post