ethiri.com

போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கான செலவுகளை கனடிய அரசு ஏற்றுக்கொண்டது..! கிறிஸ் அலெக்சாந்தர்……………………….

யூலை 2013 இலிருந்து நொவம்பர் 2015 வரை, கனடியபிரஜாவுரிமை மற்றும் குடிவரவு அமைச்சராகப் பணியாற்றியகாலத்தில் மிக அதிகமான குடிவரவாளர்களைஉள்வாங்கியபெருமையை கனடிய நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார். 26000 ற்கும்அதிகமான சிரிய ஈராக்கிய அகதிகளை மீள்குடியேற்றம் செய்துகனடாவின்குடிவரவுக் கொள்கையில் தாராளப் போக்கைக்கடைப்பிடித்த பெருமையும் கிறிஸ் அலெக்சாந்தரைச் சாரும்.

இந்தக் காலப்பகுதியில் சர்வதேச விடயங்களில் குறிப்பாகசிறீலங்காவின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாகபோருக்குப்பின்னதான சூழ்நிலையில்இனங்களுக்கிடையில் சீரானஉறவைக் கட்டியெழுப்பி சமரசம் செய்யும் தேவை குறித்து போதிய அழுத்தம் கொடுப்பதில் எமது அரசு அதிகஅக்கறை காட்டியது. இதன் ஒரு கட்டமாக 2011ல் உண்மையைக் கண்டறியும் உயர்மட்டக் குழுவொன்றையாழ்ப்பாணம் கொழும்பு வன்னி உட்பட பல பகுதிகளுக்கும் அழைத்துச்சென்றேன். கனடிய பாராளுமன்றசெயலாளர் றிக் டைக்ஸ்ரா உட்பட செனட்டர்களும் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.

ethiri.com

இந்தப் பயணத்தின் இறுதியில் சிறீலங்காவில் இராணுவ அடக்குமுறைகள் தொடர்வதையும்இனங்களுக்கிடையில் உறவைக் கட்டியெழுப்பும் விடயத்தில்சிறீலங்கா அரசு போருக்குப் பின்னரும் கூட எந்தவிடசாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம். ஐக்கியநாடுகள்மனித உரிமைச் சபையில் முதன்முதலில் சிறீலங்காவுக்கு எதிரான அறிக்கையைக் கொண்டுவந்து அங்கீகாரம்பெற்றதுடன் ஒவ்வொரு வருடமும்அதேவித அழுத்தத்தைத் கொடுத்து வருவதிலும் குடிவரவு அமைச்சராகஇருந்த நான் முழுமூச்சாக செயற்பட்டேன்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற மோசமான போரில் காணாமல்போனோர் கண்டறியப்பட வேண்டும்போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் வடக்கு கிழக்கில்இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரேயொரு அரசாகவும் எமது அரசு செயற்பட்டது. போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கான செலவுகளைப் பொறுப்பதற்கும் கனடிய அரசு அப்போது முன்வந்ததுடன்நிதியுதவியும் வழங்கியது. இத்தகைய உத்வேகமானசெயற்பாடுகள் மற்றும் அழுத்தம் காரணமாக 2013 செப்ரம்பரில் வடக்கு மாகாணத்தில் உள்ளுர் தேர்தல்கள் நடைபெறுவதற்கும் வழிபிறந்தது.

வெளிநாட்டமைச்சர் கௌரவ ஜோண் பெயர்ட் மற்றும் குடிவரவு அமைச்சராக இருந்த எனது நேரடிசெயற்பாடுகள் காரணமாக பிரதமர் கௌரவ ஸ்ரீவன் காப்பர்அவர்கள் 2013 நொவம்பரில் கொழும்பில்இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளுக்கான சர்வதேச மாநாட்டைப் புறக்கணித்து சிறீலங்காவில் தொடரும்மனித உரிமைமீறல்களையும் ஏற்கனவே நடைபெற்ற இனவழிப்பையும் உலகின் கண்களுக்குத்தெளிவுபடுத்தினார். எமது தொடர்ச்சியான சர்வதேச ரீதியானசெயற்பாடுகளாலும் ஏனைய நாடுகளுடன்இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவும் 2015 ஜனாதிபதித் தேர்தலில், அப்போதைய அதிபர்மகிந்தராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார்.

கனடிய அரசில் அங்கம் வகித்தாலும் அல்லது அதற்குப் பின்னதான காலப்பகுதியிலும் கிறிஸ் அலெக்சாந்தரின்தமிழருக்கு நிரந்தரத் தீர்வு குறித்த அக்கறையும்செயற்பாடுகளும் காத்திரமாகத் தொடர்கிறது. அண்மையில்கனடாவுக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் கௌரவ விக்னேஸ்வரன் அவர்களைநேரில்சந்தித்து கனடிய அரசில் நேரடி செயற்பாடுகளை மேலதிக அழுத்தத்துடன் தொடர்வதற்கு நடவடிக்கைகளைமேற்கொண்டார்.

சிறீலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியான விசாரணையும் நிரந்தர தீர்வும் அவசியம் என்பதற்குதொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதுடன்காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவர்களதுஉறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியப்படுத்துவது அவசியம் என்பதையும்வலியுறுத்திவருகிறோம். அத்துடன் வடக்கு கிழக்கில் மக்களிடம் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் நிலைதோன்றுவது அவசியம். பாரிய இராணுவப் பிரசன்னமும் இராணுவமுகாம்களும் வடக்கு கிழக்கில் குறைக்கப்படவேண்டும். அரச சக்திகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீளவும் தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். ஐநா வழங்கியுள்ள காலக்கெடுவை சிறீலங்கா அரசு மதித்து செயற்பட அழுத்தம்கொடுக்கப்படவேண்டும்.

மிக நீண்டகால பாரம்பரிய கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் கொண்ட சிறீலங்கா தனது வர்த்தகம்மீள்கட்டுமானம் வளர்ச்சி போன்றவற்றைக் கருத்தில்கொண்டு 1950களிலிருந்து தீர்வின்றி இழுபடும்இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தொடர்ந்துஇத்தகையசெயற்பாடுகளின் வெற்றிக்காகக் குரல் கொடுத்துவரும் ஒருவன் என்ற வகையிலும் மத்திய அரசில்அங்கம் வகித்தவன் என்ற வகையிலும் தொடர்ந்தும்இத்தகைய தமிழர் உரிமைக்கான குரலாக ஒலிக்க எனதுபூரண ஆதரவைத் தெரிவிக்கின்றேன்.

கொன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கான தேர்தலில் எனக்கு தங்களது ஆதரவை வழங்கிஎன்னைத் தெரிவுசெய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post