ethiri.com

நாடு முழுவதும் ‘ஹோலி பண்டிகை’ கோலாகலம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து……………

வண்ணமயமான உற்சாக திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த திருநாளையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘வண்ணங்களின் திருவிழாவான இந்தப் பண்டிகை நமது நாட்டின் மாறுபட்ட கலாச்சாரங்களை ஒருமைப்பாடு என்னும் ஒரே குடையின்கீழ் வானவில்லாக இணைக்கட்டும்.

ethiri.com

வசந்தகாலத்தை வரவேற்கும் இந்த பெருவிழாவானது, நமது வாழ்வில் தன்னிறைவுகளை நிறைவேற்றும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கட்டும். இந்த தனித்தன்மை வாய்ந்த திருவிழா நமது மக்கள் அனைவரிடையிலும் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதாக அமையட்டும்.

நாட்டின் அமைதி மற்றும் வளமைக்கான புதிய துவக்கமாக இந்த ஆண்டின் ஹோலி பண்டிகை அமையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘வண்ணங்களின் திருவிழாவான இந்த ஹோலி நாளில் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகிழ்ச்சியையும், பூரிப்பையும் மக்களிடம் விதைக்கும் நாளாக இந்த ஹோலி திருநாள் அமையட்டும்’ என தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்த விசேஷமான திருநாளில் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நமது வாழ்வில் அமைதி, ஒருமைப்பாடு, வளம், மகிழ்ச்சி ஆகியவற்றை இந்த ஹோலி திருநாள் வழங்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post