ethiri.com

சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு யாருடையது? என்பது பற்றி விசாரிக்க வேண்டும்: எச்.ராஜா……………..

சுட்டு கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு யாருடையது? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில் கூறியுள்ளார்

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ethiri.com

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள நிலையில் நாளைக்குள் 4 மாநில முதல்வர்கள் பதவியேற்பார்கள். ஆற்காடு நவாப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துடன் சிறுபான்மையினரையும் அனுசரித்து செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜ.க தலைமை முடிவு செய்யும்

காவிரி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை.

2014 -க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ இறந்துள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
பாகிஸ்தான் வீரர்கள், உரி பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்கிய போது மத்திய அரசு எப்படி நடவடிக்கை எடுத்ததோ அது போன்ற நடவடிக்கையினை நிச்சயம் எடுக்கும்.

மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட இலங்கை அரசு காரணமாக இல்லாமல் கூட இருக்கலாம் . சீன ரோந்து படை கூட காரணமாக இருக்கலாம் .

மீனவர் பிரிட்ஜோ சென்ற படகு மத்திய அரசுக்கு எதிராக பணம் கொடுத்து மக்களை தூண்டும் கும்பலுடையதாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Post