ethiri.com

வெல்லும் வரை போராடு ..!………………

விழுந்தாய் என்று அழுதாய் என்ன
எழுவதை அறிய மறந்தாய் என்ன ..?
புண்களை அறிந்தால் விடியல் பிறக்கும்
புன்னகை கொண்டால் வாழ்தல் செழிக்கும் ….

உப்பு கண்ணீர் உன்னை நனைக்கும்
உள்ள குமுறல் நெஞ்சை பிளக்கும்
அதையும் தாண்டி எழுந்திட முனைந்தால்
அகிலம் உந்தன் கையில் கிடைக்கும் …

இலக்கை அடையை தடைகள் உடைப்பாய்
இருளும் சூழ்ந்தால் நெருப்பாய் எரிவாய்
ஆயிரம் வீழ்ச்சி ஒரு நாள் எழுச்சி
அகில தோளில் உந்தன் முயற்சி ….

துன்பம் விழைந்தால் சோர்தல் தருமே
சோர்தல் கொண்டால் எழுச்சி எழுமோ ..?
விடயம் இது தான் விளங்கி நடப்பாய்
விரைவாய் அறிவை விதைத்தே பறப்பாய்….!

– வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -13/03/2017 

Related Post