ethiri.com

இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் : சீமான் அழைப்பு…………

தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி
இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர்கள் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு காணொளி மூலம் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

ethiri.com

நம் மீனவச் சொந்தங்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

நாள்: 13-03-2017
நேரம்: சரியாக காலை 10 மணி
இடம்: நுங்கம்பாக்கம்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

என்ற புரட்சிப் பாவலரின் புரட்சி வரிகளுக்கேற்ப திரள்வோம்! திரள்வோம்! பகைமிரளத் திரள்வோம்! பைந்தமிழ் இனத்தீரே!
நாம் தமிழர்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post