ethiri.com

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 65 தமிழர்கள் கைது………….

தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு மரம் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில், இன்று ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் 65 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடப்பா பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

ethiri.com

இதற்கிடையே, திருப்பதி பாக்ராப்பேட்டை அருகே செம்மரம் கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரக் கடத்தல் கும்பல்கள் அதிக கூலி கொடுப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களை ஆசை காட்டி அழைத்துச் சென்று பலிகடா ஆக்குகின்றனர். திருப்பதி சேசாலம் வனப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, 20 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post