ethiri.com

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி…………..

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து 6.3.2017 அன்று ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் அவர்களின் ஐ.என்.டி-டி.என்-10-எம்.எம்-514 விசைப்படகில் பாக் வளைகுடாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இரவு 9.30 மணி அளவில் மீனவர்களை நோக்கி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

ethiri.com

துப்பாக்கிச் சூட்டில், அப்படகிலிருந்த ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கெமிலஸ் மகன் பிரிட்ஜோ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் காயமடைந்த சரண் என்பவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அன்னாருக்கு தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்தும், அச்சுறுத்தியும், படகுகளை கைப்பற்றுவதும், தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதை தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, நிரந்தர தீர்வு காண வற்புறுத்தி வந்துள்ளது.

தற்போது நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த பிரிட்ஜோ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

துயரச் சம்பவத்தில் காலமான பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும், காயமடைந்த சரண் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post