ethiri.com

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் | நாம் தமிழர் கட்சி-05-03-2017………….

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் (சென்னை)
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் காணொளி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

ethiri.com

நம் நிலத்தையும், வளத்தையும், நீரையும், காற்றையும் கெடுக்கும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்கும் கொடியத் திட்டத்தைத் தடுக்க, அதைத் திணிக்கும் அரசுகளுக்கெதிராகப் போர்த்தொடுக்கத் தாய்மண்ணை நேசிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் எல்லோரும் தவறாமல் கூடுவோம்!

இடம்: வள்ளுவர்கோட்டம்
நாள்: 05-03-2017
நேரம் சரியாக காலை 10 மணிக்கு

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

மண் வளம் காப்போம்!
மக்கள் நலம் மீட்போம்!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post