ethiri.com

பிரச்னைக்கு தீர்வு காண இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க அமெரிக்கா தீர்மானம்………..

இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவரவுள்ளது இலங்கை பிரதிநிதிகள் குழுவின் நல்லிணக்க பொறிமுறைக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற உப மாநாடொன்றின் போது கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ethiri.com

2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய தீர்மானத்தை பிரித்தானியாவே கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய தீர்மானத்தின் ஊடாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில், அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, மொன்ரினிக்ரோ உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கையும் இணை அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post