ethiri.com

இது தானா உன் காதல் ..?……………………….

நீயே வந்து காதல் சொன்னாய்
நித்தம் நெஞ்சில் ஆசை தந்தாய்
முட்டும் கண்ணீர் விழியில் தந்து
முன்னே விட்டு எங்கோ சென்றாய் ..?

விளையாட்டாய் காதல் உனக்கு
வீழ்ந்து துடிக்கும் வேதனை எனக்கு
இதுக்கு பேர் தான் காதலா
இதை அறியாது போனதால் சாதலா …?

ethiri.com

நீயும் நானும் ஒன்றானோம்
நித்தம் வாழ்வில் சுகமானோம்
சக்கர வேகத்திலே சுழன்ற ஊடல்
சாதியிலே வெந்ததென்ன பதில் சொல்லு …

உன் நிலை நீ சொல்ல – விழி
உடைந்த கண்ணீரை
அள்ள கரம் தரவில்லையே
அன்பே இது தானா உன் காதல் ..?

– வன்னி மைந்தன் –
02/03/2017 

Related Post