ethiri.com

சந்தன மேனியை செந்தணல் தின்றதோ ..?………….

சந்தன மேனியை செந்தணல் தின்றதோ ..?

பாடாத வாயெல்லாம் படுமடா – இந்த
பாடகன் புகழை பேசுமடா ….
நீறாய் பகை ஈழம் எரிக்கவே
வீரமாய் எழுந்தே குரல் தந்தவா ….

பூட்டிய வீடுகள் கதவு திறந்தவா
புலி அணி பெருகவே பலம் தந்தவா ………….
நீயா போனாய் நீயா மறைந்தாய்
நீராலே விழி குளிக்குதடா….

சந்தன மேனியை செந்தணல் தின்றதோ ..?
சாவை துரத்திய மேனியை கொன்றதோ …?
நோகுதடா நெஞ்சம் வேகுதடா தேசம்
வேலவன் தம்பியே எழுந்து வாடா …வா …

போர் புலியே நீ தூங்கவோ
நோயை தந்தான் சிங்களமோ …
உன்னை கொன்றாதாய் சிங்களவன் நினைப்பு
உன்னாலே புது புலி உயிர்ப்பானே நம்பு … …

சந்தன மேனியே எங்கள் சாந்தனே
மெல்ல தூங்கு வெளிச்சமிட புலிகள் வருவார் ……………
சிங்களவன் தேசம் எங்கள் வசமாகும்
அன்றே உங்கள் செயல் எரிமலையாகும் …!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
தமிழீழ தேச பாடகர் சாந்தனின் கல்லறையில் சமர்ப்பணம் .
26.02.2017

சந்தன மேனியை செந்தணல் தின்றதோ ..?


 

Related Post