ethiri.com

நினைவு நாள் கவிதை……………

ஏடெடுத்து எழுத துடிக்கிறது என் மனம்
எழுதுகோல் பிடிக்க நடுக்கம் கொள்கிறது
என் விரல்கள் எட்டாண்டுகள் ஆகியும் !

இரணைப்பாலை இயக்கத்தின் ஒரு
அத்தியாயம் என நாம் நம்பியிருக்க
சுற்றி இருந்தவர்களின் சூழ்ச்சியா?
அல்லது சூழ்நிலையின் உச்சக்கட்ட
தண்டனையா?
இதை என்னவென்று நாம் சொல்ல?

ethiri.com

மாசி இருபத்தாறு மணிக்கணக்கில்
மல்ரிபரல் கக்கி மூச்சடங்கி போனது
யாரறிவார் என் உடன் பிறப்பின் மூச்சும்
நின்று போகும் என்று??
நாழிகையும் அதுவாய் கடந்து செல்லச்
செல்ல வந்ததே ஒரு சேதி “தமிழ்”
இல்லையாம் என !!

மணக்கோலம் கண்டு ஒரு வருடத்திற்குள்
இவன் மனதிற்குள் ஏராளம் கனவுகள்
இருந்திருக்கும் அவையாவும் நிறைவேறாமலே
குறைந்து போய் விட்டான் என் குடும்ப
எண்ணிக்கையில் ஆறாவதாக….

கண்ணீரில் நீந்துகிறேன்
என் நினைவுகள் அனைத்தும்
இவன் நினைவுகளாக அலை மோதுவதால்..
பிரிவு என்பது நின்மதியின் எதிரி !
ஏங்கி நிற்கும் என் நிலை அறிந்து
எனை தாங்கி பிடித்து இன்நிலை
போக்க என் அடுத்த பிறவியிலும்
நீயே என் உடன் பிறப்பாக வேண்டுமென
இரக்கமற்ற இறைவனிடம் மண்டியிட்டு
வேண்டுகிறேன் !!
உன் நினைவுகளோடு…😭

மார்ஷல் வன்னி

ஈழம் ரஞ்சன்
 

Related Post