ethiri.com

தமிழ் மக்களை மந்தைகளாக கருதி வீதிகளில் அலைய செய்திருக்கும் இந்த ஆட்சி நல்லா ட்சியா – சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வி ………………..

தமிழ் மக்களை மந்தைகளாக கருதி வீதிகளில் அலைய செய்திருக்கும் இந்த ஆட்சியை நல்லா ட்சி என அழைக்கத்தான் வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்களின் வாழ்நிலங்களை ப றிப்பது அந்த மக்களை படுகொலை செய்வதற்கு சமமானது எனவும் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடந்த 23 நாட்களாக மக்க ள் தங்கள் சொந்த காணிகளுக்காக நடத்திவரும் தொடர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகை யில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று காலை(22-02-2017) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போ
தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பிலக்குடி யிருப்பிலும், புதுக்குடியிருப்பிலும் நடந்து கொண்டிருக்கும் மக்களுடைய போராட்டங்கள் வெறுமN ன அந்தந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கவேண்டும். என்பதற்கான போராட்டம் அல்ல. வ டக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் படையினர்வசம் உள்ள சுமார் 35 ஆயிரம்வ
ரையிலான நிலங்களை விடுவிக்கவேண்டும். என்பதற்கான போராட்டம். மக்களுடைய நிலங்களில் மக்கள் நின்மதியாக வாழும் வரையில் இவ்வாறான போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. மேலு ம் 23 நாட்கள் கடந்திருக்கும் போராட்டம் மேலும் சக்தியுடன் விரிவடைவதற்கான சூழலை அரசா ங்கம் உருவாக்கி கொண்டிருக்கின்றது. இதனை அரசாங்கம் மட்டுமல்ல எதிர்கட்
சி வரிசையில் உள்ளவர்களும் புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் இந்த மக்களுடைய நிலங் களில் அவர்களுடைய வாழ்வாதாரம் தங்கியிருக்கின்றது. அவர்களுடைய நிலங்களை பறிப்பது அவர்களை சாகடிப்பதற்கு சமமானதாகும். அந்த வேலையையே மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலமையிலான கூட்டாட்சி செய்து n
காண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளுக்கும், ஜெனீவாவுக்கும் இந்த அரசாங்கம் கொடுத்த வாக்கு றுதி என்ன? சொந்த நிலங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்பதே. ஆனால் அது நடந் ததா? ஒரு துண்டு நிலம் கூட மக்களிடம் வழங்கப்படவில்லை. மாறாக படையினருடைய இருப்பு க்காக வடகிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை மேலும் சுவீகரிப்பதற்கே
இந்த அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது. இந்நிலையில் 23 நாட்கள் போராட்டத்திற்கு தமி ழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் ஆதரவினை வழங்கி வருகின்றார் கள். காரணம் இது நியாயமான ஒரு போராட்டம். என்பதனாலேயே எனவே இந்த போராட்டம் மென்மேலும் விரிவடைந்து வலுவான ஒரு போராட்டத்தை எதிர்கொள்வதற்காக
இந்த அரசாங்கம் தாயர்நிலையில் இருக்கவேண்டும். மக்களை மந்தைகளாக வீதியிலே கிடக்க விட்டிருக்கும் இந்த அரசாங்கத்தை இனியும் நல்லாட்சி என அழைக்கத்தான்வேண்டுமா?
ஆகவே இந்த போராட்டம் பிலக்குடியிருப்பில் 42 ஏக்கர் 19 ஏக்கர் புதுக்குடியிருப்பு காணிகளையும் ஒட்டு மொத்தமாக 35 ஆயிரம் ஏக்கர் காணி யை விடுவிக்கும்வரை போராட்டங்கள் தவிர்க்க முடியாதது.
ஓவ்வொரு அங்குல நிலமும் அவர்களுக்கு சொந்த மானது. ஜெனீவாவில் கொடுத்த உத்தரவாதம் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படுவார் கள். என ஒரு துண்டு நிலம் கூட விடவில்லை. தொடர்ச்சியாக நிலங்களை கபளீகரம் செய்யும் வேi லயை செய்கின்றது.
23 நாள் போராட்டம் அரசாங்கம் நினைத்திருக்காது. இந்த போராட்டத்திற்கு சிங்கள முஸ்லிம் மக்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். காரணம் இது நீதியான போராட்டம். நிலம் உரித்தானது என்பதை சொல்லும் அரசுக்கு காணிகளை பறிக்க யோக்கியதை இல்லை. என கூறுவதற்கான போராட்டம்.
முழுமையாக வடகிழக்கில் காணிகளை பெறும்வரை இந்த போராட்டம் விரிவடைய வேண்டும். போராடாவிட்டால் அது எல்லாம் முடிந்து விட்டதாக காட்டும். மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு தெளிவாக சொல்லவேண்டும். இந்த விடயங்கள் இவ்வாறு இழுபறிப்பட்டு போக முடியாது. அரசு சர்வதேச நாடுகளுக்கு, ஜெனீவா கொடுத்த உத்தரவாதம் காப்பாற்றப் ப
டவேண்டும். மீள குடியேறாத வரையில் இனங்களளுக்கிடையிலான நல்லெண்ணம். இல்லை மக்களை மந்தைகளாக கருதி வீதியில் கிடக்கவிட்டு நல்லாட்சி ஒரு நீண்ட போராட்டத் திற்கு முகம் கொடுக்கவேண்டிய தேவையை அரசு உருவாக்கி வருகின்றது. இந்த போராட்டம் நீடிக்கும். இது புர்ந்துணர்வுக்கு நல்லதல்ல. அரசு மட்டுமல்ல எதிர்கட்சிகளில் உள்ளவர்களும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்;.எனவே
மக்களை அமைதியாக வாழும் சூழலை உருவாக்கவேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

நிருபர் சோழன்  

ethiri.com

Related Post