ethiri.com

உணர்ந்து கொள் …!…………..

வாலிபம் என்பது இனிக்குமடி
வாழ்க்கை என்பது கசக்குமடி …
துன்பம் வந்து சூலையிலே
துணிவுடன் நீயும் எழுந்திடடி ….

ethiri.com

உயிரை அழிப்பவர் கோழையடி
உணர்வுடன் எழுபவர் வீரரடி …
இன்பமும் துன்பம் வாழ்வில் ஒன்று
இதை உணர்ந்தே நடந்தவர் வாழ்வு நன்று …

உன்னை நீயே வழி நடத்த
உனக்கு நீயே வழிகாட்டு ….
துன்பம் சூழ்ந்தால் சிரித்து நடா
இன்பம் வந்தால் விழித்து நடா …

முடியும் உன்னால் முந்தி எழு
மூர்கதனமாய் கொதித்து எழு ….
மின்னலும் உன்னை தொட மறுக்கும்
மிரட்டும் இடியும் வர மறுக்கும் ….

இல்லே என்று நீ அழுதால்
இருட்டில் தானே நீ இருப்பாய் …
முடியும் உன்னால் முன்னேறு
முட்டிய கண்ணீர் வெளியேற்று …

அடக்க நினைத்தால் பணியாதே
அடங்கிட முனைந்தால் மிதியாதே
எதுவரை துன்பம் உனை விரட்டும் ..? – நீ
எழும் வரை தானே அது நடக்கும் …

வன்னிமைந்தன் (ஜெகன் )
22/02/2017 

Related Post