ethiri.com

வெற்றி கூடும் வா ….!……………….

முடியும் என்று மோது – முகில்
முட்டும் மலையும் தகரும் …
தேடல் கொண்டு ஓடு
எட்டு திசையும் உன்னை பாடும் ….

வளரும் போது தடைகள் – உன்
வாசல் வந்து தட்டும்
வாடி நீயும் போனால் – உந்தன்
வளர்வு உன்னை திட்டும் ….

திட்டம் நீயும் போட்டு
திசையை நோக்கி ஓடு
எண்ணி யதே நடக்கும்
எதிராளியும் கை தட்டும் …

வென்று விட்டால் போதும்
வெளி உலகும் உன்னை பாடும் ..
நின்று நீயும் போனால்
நித்தம் வசைகள் கூடும் …

ஒன்றை இழந்து தானே
ஒன்றை தேட முடியும் …
ஓடும் போதே சலித்தால்
வெற்றி என்றோ கூடுமோ ..?.!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
19/02/2017 

Related Post