வவுனியாவில் கழிவுகளை அகற்றும் இடத்தையும் விட்டுவைக்காத அமைச்சர் றிசாட்: பிரதேச சபை குற்றச்சாட்டு

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் திண்மக்கழிவுகள் அகற்றும் இடத்தினையும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் விட்டுவைக்கவில்லை என தெரியவருகிறது.

சாளம்பைகுளம் பகுதியில் காடுகளை அழித்து பொதுமக்களை மீளக்குடியமர்த்தியுள்ளதுடன், தற்போது திண்மக்கழிவு அகற்றும் இடத்தினை மாற்றுமாறு தெரிவித்து வருவதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை குற்றம்சாட்டியுள்ளது.

இன்று காலை சாளம்பைக்குளம் பகுதிக்கு சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் அங்கு திண்மக்கழிவுகளை பிரதேச சபை மற்றும் நகரசபையினால் கொட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் பல குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளதால் தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனை அழைத்து தமது பிரச்சினைகளைத் தீர்த்து தருமாறு கோரிர்.

அதையடுத்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி. சுகந்தி கிஷோர் கருத்து தெரிவிக்கையில், அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியை ஒதுக்கியுள்ளதாகவும் சுமார் 20 ஏக்கர் அதற்காக ஒதுக்கியுள்ளதுடன் தற்போது 2ஏக்கரில் திண்மக்கழிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இப்பகுதியில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளும்போது அமைச்சருக்கு இது விடயம் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது திண்மக்கழிவு அகற்றும் இடத்தினை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் குறித்த அமைச்சரினால் பல குடும்பங்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியிலுள்ளவர்கள் வீடுகளை நிர்மாணித்துவிட்டு வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பல வீடுகளில் மக்கள் நடமாட்டம் இன்றி காடுசார்ந்து காணப்படுவதுடன் மது அருந்துதல், கலாச்சார சீரழிவுகளும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post