( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தமிழ்நாட்டில் ‘சிறைக்கு பின்னால் இருந்து அரசு இயங்கும்-முன்னாள் நீதிபதி கட்ஜூ ………………..

தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்கு பின்னால் இருந்து அரசு இயங்கும் என சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கே. பழனிசாமி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றிருப்பது குறித்து சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் விமர்சித்து உள்ளார். அதில் அவர், “தமிழர்களே, பாராட்டுக்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்கம்பிகளுக்கு பின்னே இருந்து இயக்கப்படுகிற ஒரு அரசாங்கத்தை 4 ஆண்டுகள் பார்க்கப்போகிற சிறப்பை அடைந்திருக்கிறீர்கள். பழனிசாமி, சிறையில் இருந்து கட்டளைகளை பெற்று நிறைவேற்றுவார்” என கூறி உள்ளார்.

“ஆனாலும் தமிழர்களே, கவலைப்படாதீர்கள். ஏற்கனவே இப்படி மாநிலத்தில் முன்னுதாரணமாக நடந்திருக்கிறது” என்றும் அவர் கூறி உள்ளார்.

பீகாரில் முதல்-மந்திரியாக இருந்த லாலு பிரசாத் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றபோது, அவரது மனைவி ரப்ரி தேவி முதல்-மந்திரியாக இருந்ததைத்தான் கட்ஜூ இப்படி சுட்டிக்காட்டி உள்ளார் என நம்பப்படுகிறது.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post