சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை…………

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்
புழுங்கல் அரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
துருவிய கேரட் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.

* உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.

* புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சத்தான சுவையான கேரட் – கம்பு அடை ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
 

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post