பிரபல நடிகையுடன் வெற்றியை கொண்டாடிய சூர்யா………….

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘எஸ்-3’. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் வசூலில் தயாரிப்பாளர்களை திருப்திபடுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை சூர்யா பிரபல நடிகையுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அது வேறு யாருமல்ல, கீர்த்தி சுரேஷ்தான். கீர்த்தி சுரேஷ் தற்போது சூர்யாவுடன் சேர்ந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் சேர்ந்து ‘எஸ்-3’ வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சூர்யா. இதற்காக மிகப் பிரம்மாண்ட கேக் வரவழைக்கப்பட்டு, சூர்யா அந்த கேக்கை வெட்டி அங்கிருந்த அனைவருக்கும் பரிமாறினார்.
 

Related Post