பன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட்………..

பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம்
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி – 3/4 கப்
அரிசி மாவு – 1/2 கப்
கடலை மாவு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பன்னீர் – 1/4 கப் (துருவியது)
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது பன்னீர் – பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post