( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தீ விபத்தில் இருந்து எஜமானர் குடும்பத்தை காப்பாற்றிய பூனை…………..

கனடாவின் அல்பொடாவில் நடமாடும் ‘மொபைல்’ வீட்டில் பெற்றோர் தனது 2 குழந்தைகளுடன் இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

அவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். வீட்டில் கடும் புகை சூழ்ந்தது. அப்போது அந்த வீட்டின் எஜமானர் வளர்த்து வரும் பூனை மட்டும் விழித்துக்கொண்டது.

எரியும் தீயில் இருந்து தனது எஜமானர் குடும்பதை காப்பாற்ற அரும்பாடு பட்டது. திடீரென தூங்கிக் கொண்டிருந்த எஜமானரின் மனைவியின் கையை பலமாக கடித்தது.

இதனால் அவர் அலறியடித்த படி எழுந்தார். அப்போது தான் வீட்டில் தீ எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே தனது குழந்தைகளுடன் அந்த வீட்டில் இருந்து வெளியேறி காயமின்றி உயிர்தப்பினார்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். போட்டோகிராபர் வில்லியம் வாவ்ரெக்கும் வந்து புகைப்படம் எடுத்தார்.

அப்போது தான் தன் எஜமானர் குடும்பத்தை அவர்கள் வளர்த்த செல்லப் பூனை காப்பாற்றியது தெரிந்தது. உடனே ‘ஹீரோ’ ஆக செயல்பட்ட அந்த பூனையின் போட்டோவை சமூக வலைதளங்களில் பிரசுரித்தார். தற்போது அது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Post