( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

அவல் உப்புமா………….

ethiri.com

சத்துக்கள் நிறைந்த அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த அவலில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

* வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும் 

பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post