ethiri.com

மனிதனாய் இரு ….!…………………..

கமனிதனாய் இரு ….!
கரையான் என்னடா வெள்ளான் என்னடா எல்லாம் மனிதரடா
கல்லாய் போன மனிதராலே ஏனோ சண்டையடா ..?
உறக்கம் இன்றி ஊரும் தானே வீதியில் கிடக்குதடா – நீ
உதவா இன்று உறங்கின் மனிதனோ சொல்லிடடா …

பேரும் புகழும் வேண்டும் என்றே பேயாய் அலைகின்றாய்
பேருதவி புரிய மறந்து ஏனோ தூங்கி கிடக்கின்றாய் ..?
நக்கி குடிக்கும் நாய்க்கு கூட குந்த இடமுண்டு
நரை விழுந்தே துடிக்கும் எங்களுக்கு எங்கோ வாழ்வுண்டு ..?

ethiri.com

வந்தான் சிங்களன் வாலை பிடிக்கும் கூட்டமே இங்குண்டு – நாம்
வாழ்ந்த மண்ணை மீட்க இங்கோ எவருக்கு துணிவுண்டு ..?
கந்தன் கூட கரையான் ஆனான் எங்கோ கோவணமோ ..?
பிள்ளையர கூட வெள்ளான் ஆனார் என்ன கேவலமோ ….

ஊருக்கு நாலு சாதிகள் செய்தே ஊரே அடிபாடு – இந்த
ஊனத்தை கழுவிட கொஞ்சம் உன்னை நீயும் குளிப்பாட்டு …
ஆதிக்க வெறியின் அடக்குமுறையை உடைத்தே எழுந்திடடா
ஆணவ சாதியை கொன்றே நீயும் மனிதனாய் இருந்திடடா ….!

– வன்னி மைந்தன் –
09/02/2017

முல்லை புதுக்குடியிருப்பில் இடம்பெறும் சாதியை வெறியை எண்ணிய போது….!
 

Related Post