ethiri.com

காணமல் போனோர் உறவுகளுடன் ரணில் முறுகல் – அடுத்து என்ன …?………………

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.

அரசினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது நம்பிக்கைகொள்ள வேண்டுமெனில், முதலில் விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ethiri.com

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து நீதியை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தால் போராட்டங்களை தொடர்வோம் எனவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கடந்த மாதம் வவுனியாவில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அராசங்க தரப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வவுனியாவுக்கு விஜயம் செய்து, பிரதமருடன் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய தினம் பிரதமருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post